GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
பஞ்சாப் அணி சார்பாக ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்தார்.

அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஷுப்மான் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்துள்ளது. தற்போது, குஜராத் அணிக்கு 244 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி.
பஞ்சாப் அணி தரப்பில், சிறந்த ஃபார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல், 42 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்து மைதானத்தை திரும்பி பார்க்க வைத்தார். பிரியான்ஷ் ஆர்யா 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரஷித் ஆட்டமிழந்தார். அவர் அரை சதம் அடிக்கும் முன்னரேஅவுட்டாகினார். அடுத்தபடியாக, பிரப்சிம்ரன் சிங் 8 பந்துகளில் 5 ரன் எடுத்து அவுட்டாகினார்.
15வது ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே நேரம், குஜராத் அணி தரப்பில் பந்து வீசிய ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் அதிகமாக 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ரஷித் கான் மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்கிற கணக்கில் இன்னிங்ஸை முடித்தது. இப்பொது, குஜராத் அணிக்கு 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.