சூர்யா 40 படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷல்..?
சூர்யாவின் 40 வது படத்தில் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் முக்கியமான பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.
இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் முக்கியமான பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.