இரண்டே வாரத்தில் கைகள் பளபளப்பாக மாற வேண்டுமா? இதை செய்தால் போதும்!
பொதுவாகவே பலருக்கும் முகங்கள் வெண்மையாக இருந்தாலும், கை கால்கள் சற்று வேறுபட்டு கருப்பு நிறத்தில் காணப்படுவது வழக்கம். இதனை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகித்து அலுத்து போனவர்கள் அதிகம். ஆனால், இயற்கையான முறையிலேயே கைகள் மற்றும் கால்களை வெண்மையாக்குவது சுலபம். எப்படி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- தயிர்
- அரிசி மாவு
- ஷாம்பு
- தேன்
- காபி பவுடர்
- உப்பு
செய்முறை
முதலில் உப்பு மற்றும் ஷாம்புவை நன்றாக கலந்து கையில் தடவிக் கொள்ளவும். ஒரு இரண்டு நிமிடம் மட்டும் மசாஜ் செய்துவிட்டு அதை கழுவி விடவும். அதன் பின்பு தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து கையில் தடவி 10 நிமிடம் வைத்திருக்கவும். 10 நிமிடம் கழித்து அதை கழுவியதும் அப்பொழுதே உங்களால் சற்று மாற்றத்தைக் காண முடியும்.
அதன் பின்பு தேன் மற்றும் காப்பி பவுடரை நன்றாக குலைத்து கையில் தடவி விட்டு 5 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது போல மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயமாக இரண்டே வாரத்தில் உங்கள் கைகள் நீங்கள் விரும்பும் நிறத்திற்கு வருவது உறுதி. செயற்கையான கிரீம்களை பயன்படுத்துவதற்கு இதுபோன்ற இயற்கை முறைகளை பயன்படுத்தி பயன் அடையுங்கள்.