நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி!

இயக்குனர் முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தார்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாகா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டவில்லை. இதனால், தர்பார் பட விவகாரம் காரணமாக விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதால், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு முருகதாஸ் கொடுத்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி ராமஜமாணிக்கம் முருகதாஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதி கூறுகையில், ‘நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா ? எனக் கோபப்பட்டு நீதிபதி வலக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.