கொடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு அதிகமாக ஷாப்பிங்.!லக்சரி பட்ஜெட்டை ரத்து செய்த பிக்பாஸ்.!

Default Image

கொடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்ததால் லக்சரி பட்ஜெட் ரத்து செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டிற்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது . தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெற்ற இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் 5 அணிகளாக பிரிந்து சிறப்பாக விளையாடினார்கள் .இதில் இரண்டு அணிகள் வெற்றி பெற்று அந்த 6 பேர் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் விளையாடிய நேரத்திற்கேற்ப ஒவ்வொரு அணிக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன .அதன்படி இந்த வார இந்த வார லக்சரி பட்ஜெட்டிற்காக ஒவ்வொரு அணியும் தனித்தனியாக ஷாப்பிங் செய்ய வேண்டும் . ஒவ்வொரு அணியின் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஷாப்பிங் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் ஷாப்பிங் செய்தனர் .அதில் கொடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்ததால் அந்த அணிக்கான லக்சரி பட்ஜெட் ரத்து செய்யப்படுவதாக பிக்பாஸ் கூறுகிறார் .அது எந்த அணியாக இருக்கும் என்று இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்