மாலை 6 மணி வரை தான் ஷூட்டிங், அதன் பிறகு …… சமந்தா பேட்டி!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா அண்மையில் தெலுங்கு திரையுலகில் 96 எனும் படத்தில் நடித்து தற்போது மிக வைரலாக பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு தளத்திலிருந்து நான் விலகிவிடுவேன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்றால் அதிலிருந்து நேரம் முழுவதும் இவ்வளவு தான் என்பதை கூறி விடுவேன்.
மீதி இருக்கும் நேரம் என்னுடைய கணவர் நாக சைதன்யாவுடன் மட்டும் தான். இதனால்தான் எங்கள் வாழ்க்கை சிறப்பாக செல்கிறது. அதுபோல நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் இடத்திலேயே விட்டு சென்று விடுவேன், வீடுவரை கொண்டு செல்வதில்லை, எந்த எண்ணங்களையும் நினைவுகளில் கூட வைத்துக்கொள்வதில்லை. அப்படி இருப்பதாக தெரிந்தால் நாகசைதன்யா என்னிடம் கோபப்பட்டு விடுவார், என்று சமந்தா ஓபனாக தனது வாழ்க்கையை கூறியுள்ளார்