முதன்முறையாக சர்வதேச விண்வெளி மையத்தில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு..!
முதன்முறையாக ரஷ்ய திரைப்படம் ஒன்று சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.
ரஷ்ய திரைப்படமான ‘தி சேலஞ்’ என்ற திரைப்படத்தை பிரபல ரஷ்ய இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் கதையில் விண்வெளியில் அதிகம் இருப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதனால் முதன்முறையாக உலக வரலாற்றில் சர்வதேச விண்வெளி மையத்திலேயே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
சோயூஸ் எம்.எஸ்-19 ராக்கெட் மூலம் விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ், இப்படத்தின் இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை யுலியா பெரெஸில்ட் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளனர். விண்வெளி மையத்தில் 12 நாட்கள் சூட்டிங் எடுக்க உள்ளனர். பின்னர், சோயூஸ் எம்எஸ் 18 விண்கலம் மூலமாக விண்வெளிவீரர் ஓலெக் நோவிட்ஸ்கியுடன் இவர்கள் இருவரும் பூமி திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.