தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தளபதி 65 படத்தின் கலை இயக்குனர் கிரண் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜாவில் தொடங்கப்பட்டது. தற்போது படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இசையமைக்கும் அனிருத் படத்திற்கான முதல் பாடலுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் கலை இயக்குனர் கிரண் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Happy Sunday ???????? pic.twitter.com/ddeTjZPxJ4
— drk.kiran (@KiranDrk) April 18, 2021