நிறைவடைந்தது படப்பிடிப்பு.! பஸ் மீது ஏறி நன்றி சொல்லிய தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இன்றும் ரசிகர்கள் குவிந்ததால் நடிகர் விஜய் பஸ் மீது ஏறி சிறுது நேரம் கையசைத்துவிட்டு, இன்றுடன் விஜய் சம்மந்தப்பட்ட காட்சி முடிவதால் ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரி நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தது மாஸ்டர் படக்குழு, இதில் விஜய், ஆண்ட்ரியா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்ட மூன்று பேருக்கும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனிடையே ஒரு சில நாட்களுக்கு முன்பு  மாஸ்டர் பிடிப்பு தளத்தில் பாஜகவினர் படப்பிடிப்பு இங்கு நடத்த கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த சம்பவம் அன்றிலிருந்து இன்றுவரை விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். அப்போது விஜய் வெளியே வந்து, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுப் போகும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் தினமும் படப்பிடிப்பு முடிந்து, ஹோட்டல் அறைக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார் விஜய். தற்போது, நெய்வேலியில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. இதனிடையே நேற்று ரசிகர்களுடன் எடுத்த செல்பியை தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் நன்றி சொல்லி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், படப்பிடிப்பு தளத்தில் இருந்த பேருந்தின் மீது ஏறினார். இன்றுடன் நெய்வேலி படப்பிடிப்பில் விஜய் பங்கேற்பது கடைசி நாள் என்பதால், நீண்ட நேரம் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே இருந்தார். அப்போது ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார். தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதே சமயத்தில், விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

1 hour ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

2 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

2 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

3 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

3 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

4 hours ago