நிறைவடைந்தது படப்பிடிப்பு.! பஸ் மீது ஏறி நன்றி சொல்லிய தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!
- நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இன்றும் ரசிகர்கள் குவிந்ததால் நடிகர் விஜய் பஸ் மீது ஏறி சிறுது நேரம் கையசைத்துவிட்டு, இன்றுடன் விஜய் சம்மந்தப்பட்ட காட்சி முடிவதால் ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரி நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தது மாஸ்டர் படக்குழு, இதில் விஜய், ஆண்ட்ரியா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்ட மூன்று பேருக்கும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனிடையே ஒரு சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் பிடிப்பு தளத்தில் பாஜகவினர் படப்பிடிப்பு இங்கு நடத்த கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த சம்பவம் அன்றிலிருந்து இன்றுவரை விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். அப்போது விஜய் வெளியே வந்து, ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுப் போகும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
மக்களின் வாழ்த்துக்களை விண்னைபிளக்கும் கரகோஷங்களை மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் தளபதி… pic.twitter.com/0OYHPnpkhM
— M Abbas (@AbbassMf) February 10, 2020
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் தினமும் படப்பிடிப்பு முடிந்து, ஹோட்டல் அறைக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார் விஜய். தற்போது, நெய்வேலியில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. இதனிடையே நேற்று ரசிகர்களுடன் எடுத்த செல்பியை தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் நன்றி சொல்லி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், படப்பிடிப்பு தளத்தில் இருந்த பேருந்தின் மீது ஏறினார். இன்றுடன் நெய்வேலி படப்பிடிப்பில் விஜய் பங்கேற்பது கடைசி நாள் என்பதால், நீண்ட நேரம் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே இருந்தார். அப்போது ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார். தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதே சமயத்தில், விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படமும் வைரலாகி வருகிறது.