தனுஷ் நடிக்கவுள்ள தி கிரே மேன் படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதில் கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் முடித்துள்ளார். இதனை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் “D43” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது, தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக கடந்த சில நாட்களிற்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தது.மார்க் க்ரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உள்ள ‘தி க்ரே மேன்’ படத்தினை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கவுள்ளனர். ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தில் ரயான் கோஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற சிஐஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் ,அவரை பணத்திற்காக கொலை செய்யவிருக்கும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்க உள்ளதாகவும் மார்க் க்ரேனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் இதனை தொடர்ந்து தற்போது இந்த தி கிரே மேன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…