“வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுக”- அதிபர் கிம்
கொரோனா பரவலை தடுக்க சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். ஆனால், வடகொரியாவில் கொரோனா குறித்த எந்தொரு தகவலும் அந்நாட்டு அரசு வெளியாகுவதில்லை.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தல் சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் கிம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தற்பொழுது சீனா எல்லை வழியாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளதாக வடகொரியாவில் உள்ள அமெரிக்க படைத் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ் தெரிவித்துள்ளார்.