நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.
இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலங்களான இமோ மற்றும் ரிவர்ஸுக்கு இடையேயான எல்லைப் பகுதியான எக்பெமா உள்ளூர் பகுதியில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து நிகழ்ந்ததில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,அடையாளம் தெரியாத எரிந்த உடல்கள் அப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன.இந்த பெரும் விபத்துக்கு பிறகு சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.மேலும்,தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,நாட்டின் எண்ணெய் வளங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத சுத்திகரிப்பு ஆலைகளை சோதனை செய்து அழிக்க அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…