#Shocking:பெட்ரோல் விலை ரூ.84 அதிகரிப்பு – ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.இதனால்,மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான நிலைக்கு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே தான் காரணம் என்றும்,அவர் பதவி விலக வேண்டும் என்றும் இலங்கையில் பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு லங்கா ஐஓசி (எல்ஐஓசி) எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசு நிறுவனமான இலங்கை பெட்ரோலியக் கூட்டு ஸ்தாபனமும் (CPC) முடிவு செய்தது.
அதன்படி,எரிபொருள் விலைகள் 92 ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாயும்,95 ஆக்டேன் பெட்ரோல் லிட்டருக்கு 90 ரூபாயும், சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.75 மற்றும் ஆட்டோ டீசல் லிட்டருக்கு 113 ரூபாயும் உயர்த்தியுள்ளன.
இதன்படி,92 ஆக்டேன் பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 338 ரூபாயாகும்.அதைப்போல,95 ஆக்டேன் பெட்ரோலின் விலை லிட்டர் 373 ரூபாய் ஆகும்,ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 329 ரூபாயாகவும், ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் 289 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,இந்த நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே,கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு மேலும் அதிக பாரத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
ஆக்டேன் பெட்ரோல்:
அதிக ஆக்டேன் எண் கொண்ட பெட்ரோல், அதிக சுருக்க விகிதங்கள்(compression ratios) கொண்டவை,இதனால் டர்போசார்ஜிங் உள்ளிட்டவற்றை சிறப்பாக செயல்படுத்துகிறது.மேலும்,இவை அனைத்தும் அதிக இயந்திர செயல்திறன் மற்றும் அதிக செயல்திறனை(engine efficiencies and higher performance) செயல்படுத்துகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025