ஈரானில் 21 வயதாகும் கிமியா அலிசாதே என்ற பெண் 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இரானிய பெண் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். இந்நிலையில், கிமியா அலிசாதே தனது அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார், அதில் போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க நான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களில் நானும் அதில் ஒருவர் என்றும், என்னோட வெற்றியை ஈரான் அரசு அதிகாரிகள் பிரச்சார கருவியாக மட்டுமே பயன்படுத்தியதாகவும், அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அலிசாதே தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் சமீப காலமாக நெதர்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு, கடந்த சனிக்கிழமையன்று, தாங்கள் “மனித தவறுதலாக” அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ராணுவம் அறிவித்தது. ஈரானிய அரசின் முன்னுக்குப்பின் முரணான பேச்சை எதிர்த்து அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிமியா அலிசாதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…