அதிர்ச்சி ஏற்படுத்திய ஆப்பிள்..!சாப்பிடலாமா.? வேண்டாமா.?
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதே இல்லை என்று கேள்விபட்டிருப்போம்.
ஆனால் தற்போது உள்ள ஆப்பிளை உண்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அந்த அளவிற்கு அதில் பயன்படுத்தும் வேதிப்பொருள்களால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.
இந்தியாவில் ஜம்முகாஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்ராஞ்சல் போன்ற இடங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. மற்ற காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆப்பிள் கெட்டு போகாமல் இருப்பதற்கு இயற்கையாகவே அதன்மீது ஒரு மெழுகு பூச்சானது உள்ளது. ஆனால் இந்த பூச்சு 10 நாட்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக வைக்கும். அதற்கு மேல் ஆப்பிள் கெட்டுபோக ஆரம்பித்து விடும்.
அவ்வாறு கெட்டுப்போகாமல் நீண்ட நாட்களுக்கு இருப்பதற்கு பூசப்படும் பூச்சுதான் செயற்கை மெழுகு பூச்சு. இதனை பூசுவதால் 6 மாதங்கள் வரையில் கெடாமலும், நீர் சத்துடனும் இருக்கும்.
இதற்காக பீஸ் வேக்ஸ், கார்போனா வேக்ஸ், ஷெல்லாக் வேக்ஸ் என்னும் மூன்று வகையான மெழுகினை பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் அங்கேயே இந்த மெழுகு பூச்சானது பூசப்பட்டுவிடுகிறது.
ஆனால், உள்ளூர் வியாபாரிகள் ஆப்பிள் மேலும் பளபளப்பாக தெரிவதற்காக இதற்கு மேலாக பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மெழுகினை பூசுகின்றனர். பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் மெழுகானது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
இதனை நாம் சாப்பிடும் போது குடலில் தங்கி செரிமானம் ஆகாமல் புற்றுநோயினை கூட உருவாக்கும் தன்மை கொண்டது. ஆப்பிள் மட்டுமல்லாது செர்ரி, குடைமிளகாய் போன்றவற்றிலும் இந்த மெழுகு பூச்சானது பூசப்படுகிறது.
இவற்றினை நாம் சாப்பிடும் முன்னர் கொதிக்க வைத்த நீரில் கழுவிவிட்டு சாப்பிட்டால் மெழுகு வெளியேறிவிடும். அல்லது சிறிது வினிகரை நீரில் கலந்து அதில் கழுவி விட்டு சாப்பிடவேண்டும்