பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்துள்ளதால் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு.
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அதன் பின்னர் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்தபோது சிறு விபத்து ஏற்பட்டதாகவும் அதில், குதிரை ஒன்று உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் பீட்டா அமைப்பு புகார் அளித்துள்ளது. மேலும், இதனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் விலங்குகள் நல வாரியம் மணிரத்னத்தை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் படப்பிடிப்பு நடக்குமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…