பிரபல அட்லாண்டா ராப் பாடகர் ட்ரபிள்(வயது 34) நேற்று அதிகாலை ஜார்ஜியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக,ராக்டேல் கவுண்டி ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெடிடியா கான்டி கூறுகையில்: “மரியல் செமோண்டே ஓர் என அழைக்கப்படும் ட்ரபிள்,அதிகாலை 3:20 மணியளவில் அட்லாண்டாவிற்கு அருகிலுள்ள லேக் செயின்ட் ஜேம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணை சந்திக்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்”,என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,ஜமைக்கேல் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்திற்குரிய குற்றவாளி என காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். என்பிசி செய்தியின்படி,குற்றவாளியான ஜோன்ஸ் அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து,துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில்,ராப் பாடகர் ட்ரபிள் சுடப்பட்டார் என்றும்,அப்போது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,ஜமைக்கேல் ஜோன்ஸுக்கு எதிராக கொலை,வீடு புகுந்து தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…