அதிர்ச்சி…கடலுக்குள் வெடித்த எரிமலையால் சுனாமி – வீடியோ உள்ளே!
பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலுக்கு அடியில் உள்ள ஹங்கா டோங்கா – ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் தற்போது கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.இந்த எரிமலை டோங்காவில் உள்ள ஃபோனுவாஃபோ தீவில் இருந்து தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
எரிமலை வெடிப்பு மற்றும் கடல் சீற்றத்தால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அருகில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்துள்ளது.
இந்நிலையில்,டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,டோங்கா நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி தாக்க தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.இதனைத் தொடர்ந்து,சமூக வலைதளங்களில் இது தொடர்பான,வீடியோக்களும் பரவி வருகின்றன.
Tonga’s Hunga Tonga volcano just had one of the most violent volcano eruptions ever captured on satellite. pic.twitter.com/M2D2j52gNn
— US StormWatch (@US_Stormwatch) January 15, 2022
Mannnn my heart hurts for my people rn ???????????????????? pic.twitter.com/QjzW5f1uAy
— Aki???????????? (@ahkee_fifita) January 15, 2022