3,70,000 பேர் பலி…உலக நாடுகள் அதிர்ச்சி…..நெஞ்சை பதைக்க வைக்கும் கொடூர துயரம்…!!

Default Image

சிரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3,70,000 பேர் பலியாகியுள்ளதாக திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா நாட்டில் கடந்த 8 வருடங்களாக  உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த உள்நாட்டுப் போரில்  தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் , பீராங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.இந்த கொடூர தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் உடல்கள் சிதைந்தும் , துண்டாக உடல் சிதறியும் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர போரில் ஈவு இரக்கமின்றி இதுவரை சுமார் 3,70,000 பேர் பலியானதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பலி :

உள் நாட்டு போரின் கொடூர தாக்குதலில் சிறுவர்கள் 20,836 பேரும் ,   பெண்கள் 13,094 பேரும் ஆண்கள் 78,075 பேரும்  என மொத்தம் 1,12,005 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அரசு படைகளின் பலி விவரம்  :

ஹெஸ்புல்லா அமைப்பினைச் சேர்ந்தவர்கள் 1,675 பேரும் , சிரிய இராணுவத்தினர் 50,331 பேரும் ,   அரசின் ஆதரவான போராளிகள்  8,056  பேரும் மற்றும் படை வீரர்கள் 65,083 பேர் என மொத்தம் 1,25,145 அரசு படை வீரர்கள் பலியாகி இருக்கின்றனர்.

அரசுக்கு எதிரான போராளிகளின் பலி விவரம் :

அரசின் கொள்கையை எதிர்த்து போராடியவர்கள் 2,620 பேரும் , கிளர்ச்சியாளர்கள் 63,804 பேரும் மற்றும்  ஜிகாதீக்கள் 65,335 பேரும் என மொத்தம் 1,31,759 அரசுக்கு எதிராக போராடியவர்கள் இந்த கொடூர போரில் பலியாகியுள்ளனர் .

அடையாளம் தெரியாதவர்களின் பலி விவரம் : 

இறந்து போனதில் சுமார் 285 பேர் யாரென்றே தெரியாதவர்கள் உயிரிழந்துள்ளனர்.  சிரிய நாட்டின்  உள்நாட்டுப் போரில் கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட சுமார் 75,000ற்கும் மேற்பட்டோர் ஒரே வருடத்தில் அதிகபட்சமாக பலியாகியுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டில் சுமார் 19,666 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்