யாருக்காவது ஷாக் அடிச்சிட்டுனா உடனே இதை செய்யுங்க, ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க!

Default Image

வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் எப்பொழுது கவனம் காட்டவேண்டியது இந்த மின்சாரத்திடம் தான்.

செய்ய வேண்டியவை:

ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். இதை மிகமிக கவனமாகச் செய்ய வேண்டும். அவசரப்பட்டு, முன்யோசனை இல்லாமல் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் போகிறேன் என்று நீங்கள் அந்த நபரைத் தொடுவீர்களேயானால், உங்களுக்கும் மின்சாரம் பாய்ந்துவிடும். ஆகவே, இதில் எச்சரிக்கை அவசியம்.

செய்ய கூடாதவை:

முதலுதவி செய்பவர் உடலில் சிறிதுகூட ஈரம் இருக்கக் கூடாது. மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் பொருளிலும் ஈரம் இருக்கக்கூடாது. முதலுதவி செய்பவரின் உடல் தரையுடனோ, சுவருடனோ நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கக்கூடாது. எந்த ஓர் உலோகத்தாலும் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்ற முயலக் கூடாது.

பாதுகாப்பிற்கான வழிகள்:

மின் வயர்களையும் மின்கருவிகளையும் குழந்தைகள் தொடாத அளவுக்கு உயரமான இடங்களில் வையுங்கள். மின் ஆபத்து பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். மின் கருவிகளை வாங்கும்போது, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.மின்கருவிகளை இடம் விட்டு இடம் நகர்த் தும்போது மின் இணைப்பை நிறுத்தி விடுங்கள். ஈரத்தோடு மின் கருவிகளைத் தொடாதீர்கள். தரமான, உயர்ரக மின்வயர்கள், மின்பொத்தான்கள், மின்கருவிகள் முதலியவற்றையே பயன்படுத்துங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt