இத்தாலியின் பிரிண்டிசி(Brindisi) நகரில் உள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1941-ம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. செயலிழக்கப்படாத அந்த வெடிகுண்டு ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடனும் இருந்தது. பெரும் அச்சுறுத்தலாக இருந்த வெடிகுண்டை செயலிழக்க நிபுணர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன. பின்னர் 54,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பிரிண்டிசி விமான நிலையம், ரயில் நிலையம், 2 மருத்துவமனைகளும் மூடப்பட்டன. பிரிண்டிசி சிறையில் இருந்த 200 கைதிகள், அருகே உள்ள லீசி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகப்போர் காலத்தில் வீசப்பட்டு செயலிழக்காமல் இருக்கும் வெடிகுண்டுகள், இத்தாலிக்கு பெரும் ஆபத்தாக இருந்து வருகிறது. கடந்த 1-ம் தேதி துரின் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது, உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மற்றொரு வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…