அதிர்ச்சி.! கடற்கரை சாலையில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை.!
- லண்டனின் பரபரப்பு மிகுந்த பீச் சாலையில் அடுத்தாண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
- பீச் சாலை, கடுமையான காற்று மாசுக்கு உள்ளாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
லண்டனின் நகரத்தின் பார்பிகன் எஸ்டேட்டில் உள்ள கடற்கரை சாலையில் கடுமையான காற்று மாசுக்கு உள்ளாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் படி நடைப்பயிற்சி மேற்கொள்ளுபவர், சைக்கிளில் செல்வோர், எலெட்ரிக் வாகனங்கள் போன்றவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தடையை மீறி பெட்ரோல் அல்லது டீசல் கார் பயன்படுத்துவோருக்கு இந்திய மதிப்பில் ரூ.10,000 வரை அபாரதம் விதிக்கப்படும் என்றும் அவரச ஊர்திகளுக்கும், குப்பை வண்டிகளுக்கும் விதி விலக்கு என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல் 18 மாதம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், வெற்றியடைந்ததால் நிரந்தரமாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.