அமெரிக்கா,இங்கிலாந்து,ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகளால் கூறப்படுகிறது.இந்நிலையில்,இங்கிலாந்தில் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பாக 74 வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இதேபோன்று,ஸ்பெயினில் மூன்று வழக்குகள் மற்றும் அயர்லாந்தில் ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பான ஒன்பது வழக்குகளை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,கடந்த ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கல்லீரலை தாக்கும் மர்ம நோய் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அதிக அளவிலான இந்த நோய் தொடர்பான தேடல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில்,வரும் நாட்களில் மேலும் வழக்குகள் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.எனினும்,யாரும் இறக்கவில்லை,ஆனால் ஆறு பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று WHO கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில்,ஸ்காட்லாந்தில் கல்லீரல் பிரச்சனைகள் உள்ள 10 குழந்தைகள் பற்றி அறிந்தபோது WHO இந்த மர்ம நோய்களைப் பற்றி முதலில் கண்டுபிடித்துள்ளது.பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு அவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும்,இந்த நோய்க்கான காரணங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…