அதிர்ச்சி…1-6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் – WHO எச்சரிக்கை!

Default Image

அமெரிக்கா,இங்கிலாந்து,ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகளால் கூறப்படுகிறது.இந்நிலையில்,இங்கிலாந்தில் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பாக 74  வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

இதேபோன்று,ஸ்பெயினில் மூன்று வழக்குகள் மற்றும் அயர்லாந்தில் ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பான ஒன்பது வழக்குகளை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,கடந்த ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கல்லீரலை தாக்கும் மர்ம நோய் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அதிக அளவிலான இந்த நோய் தொடர்பான தேடல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில்,வரும் நாட்களில் மேலும் வழக்குகள் அதிகரிக்கும் என்று  உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.எனினும்,யாரும் இறக்கவில்லை,ஆனால் ஆறு பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று WHO கூறியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில்,ஸ்காட்லாந்தில் கல்லீரல் பிரச்சனைகள் உள்ள 10 குழந்தைகள் பற்றி அறிந்தபோது WHO இந்த மர்ம நோய்களைப் பற்றி முதலில் கண்டுபிடித்துள்ளது.பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு அவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும்,இந்த நோய்க்கான காரணங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE UPDATE
sridhar vembu
simbu
sachin to ashwin
Uniform civil code launch in Uttarakhand - Uttarkhand CM Pushkar singh thami
Minister Sekarbabu - Palani Murugan Temple
Saif Ali Khan Attack