அதிர்ச்சி : மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ மகன் உயிரிழப்பு..!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவின் மகன் செயின் நாதெல்லா உயிரிழப்பு.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவின் மகன் செயின் நாதெல்லா. இவருக்கு வயது 26. இவர் பிறக்கும் போதே முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், செயின் நாதெல்லா மருத்துவமனையில் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.