ஆய்வில் அதிர்ச்சி.., சில சானிடைசரால் ஏற்படும் புற்றுநோய்..!
உலகெங்கிலும் 44 சானிடைசர் கொரோனாவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக பென்சீன் எனப்படும் புற்றுநோயை உருவாக்குவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள உலக நாடுகள் மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், பொதுமக்கள் மாஸ்க், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் உலகெங்கிலும் 44 சானிடைசர் கொரோனாவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக பென்சீன் எனப்படும் புற்றுநோயை மக்களுக்கு உருவாக்குவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூ ஹேவனை தலைமையிடமாக கொண்ட தரத்தை ஆய்வு செய்யும் ஆன்லைன் மருந்தியல் நிறுவனமான Valisure, உலகெங்கிலும் உள்ள 260 சானிடைசர் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதில், மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தான 44 சானிடைசரில் ரசாயனம் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்களை தொடர்ந்து வெளிப்படுவதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என கூறப்படுகிறது.
“With this discovery, we have potentially identified a new and very concerning category of contamination
in drug products.” said Valisure CEO David Light.https://t.co/9rXI4EXI1z— Valisure (@valisure) March 24, 2021
இரசாயனம் மக்களின் தோலுக்கும் மிகவும் ஆபத்தானவை. இந்த ஆபத்தை கருத்தில் கொண்டு Valisure கவலை தெரிவித்துள்ளதோடு, அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறைக்கு (எஃப்.டி.ஏ) கடிதம் எழுதி தகவல் அளித்துள்ளார். கொரோனாவைத் தவிர்ப்பதற்காக கடந்த சில நாட்களில் சானிடைசர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. அத்தகைய ஆய்வில் புற்றுநோய் ஏற்படுத்தும் பல ஆபத்தான இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பென்சீன் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதிக அளவு பென்சீன் வெளிப்படுவதால் உடலில் உள்ள இரத்த நாளங்கள் சரியாக செயல்படாது. சில நேரங்களில் சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கம் நிறுத்தப்படும் அல்லது வெள்ளை இரத்த அணுக்கள் குறையத் தொடங்குகின்றன. இதன் காரணமாக நோயெதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாகிறது என கூறப்படுகிறது.