பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிப்பு.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடுத்துள்ள உருமாறிய கொரோனாவுக்கு IHUB.1.640.2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா நாடான கேமரூனில் இருந்து மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இதுவரை புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்களால் IHUB.1.640.2 என்று பெயர் சூட்டப்பட்ட உருமாறிய கொரோனா 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இந்த வகை கொரோனா இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த புதிய வகை கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…