கனடாவின் டொராண்டோவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவின் டொரன்டோவில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் வேனில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்த போது,எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து,கனடா காவல்துறை தகவலின்படி,உயிரிழந்த மாணவர்கள் மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கிரேட்டர் டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் பகுதிகளில் படிக்கும் 21 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்,விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,இந்த விபத்து தொடர்பாக கனடாவுக்கான இந்திய உயர் கமிஷ்னர் அஜய் பிசாரியா தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது,
“கனடாவில் இதயத்தை நொறுக்கும் சோகம்:டொராண்டோ அருகே வாகன விபத்தில் 5 இந்திய மாணவர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…