நடிகர் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது நடிகர் சிம்புவுடன் பத்து தல என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி என்பவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
மேலும் தற்போது இதற்கான படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, பொன்மலை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. சிறந்த குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, சிங்கம் புலி, சவுந்தர ராஜன், சுஜாதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கவுள்ளார். இவர் நடிகர் மற்றும் மருத்துவரான ராஜேஷ்கர் மற்றும் நடிகை ஜீவிதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா,…
சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…