ஷிவானியை அவரது தாயார் திட்டியதற்கு நானும் காரணம் – கண்கலங்கிய பாலாஜி!
ஷிவானியை அவரது தாயார் வந்து திட்டியதற்கு நானும் காரணமாக இருக்கிறேன் என எண்ணும் பொழுது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என பாலாஜி கண் கலங்குகிறார்.
ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது பிரீஸ் டாஸ்க் எனும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்க்குக்காக தான் ரசிகர்களும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 86 ஆவது நாளான இன்று பிரீஸ் டாஸ்க் துவங்கியுள்ளது.
முதன்முறையாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். வந்ததும் கட்டியணைத்த தாயார், அதன்பின் ஷிவானியிடம் சற்று கோவமாக நீ எதற்காக இந்த வீட்டிற்குள் வந்தாய், நீ உள்ளே செய்வது வெளியே யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கிறாயா என திட்ட ஆரம்பித்தார். இந்நிலையில் அவரது தாயார் திட்டுவதற்கு நானும் காரணமாக இருக்கிறேன் என எண்ணும் பொழுது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என பாலாஜி தற்பொழுது கண் கலங்குகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram