பாலாஜியோட நிழலில தான் ஷிவானி இருக்காங்க.! கொளுத்தி போட்ட பிக்பாஸ்.!
பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேட் செய்த போது பயன்படுத்திய வார்த்தைகளை கூறி பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில், பல்வேறு காரணங்களை கூறி சனம் ,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானியை நாமினேட் செய்தனர் .
தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய காரணங்களை கூறி நாமினேட் ஆனவர்களின் பெயர்களை கூறவுள்ளார் .அந்த வகையில் பேக்கேஜ் வச்சுக்கிட்டு எல்லோரையும் தப்பா புரிஞ்சுகிறாரு , சிரிச்சிட்டே பேசி மற்றவர்களை காயப்படுத்துறாங்க ,வீட்டோட அமைதியை கெடுக்குறாங்க,பாலாவோட நிழலில இருக்காங்க உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி நாமினேட் செய்துள்ளாதாக பிக்பாஸ் கூறுகிறார்.அதற்கு ஷிவானி என்னை நாமினேட் பண்ண வேற காரணமே கிடைக்கலையா என்று கூறுகிறார்.எல்லா நேரமும் பிக்பாஸ் இதுபோன்று கொளுத்தி போட போட்டியாளர்களிடையே சண்டை நடப்பது வழக்கம்.இன்று எப்படி என்று நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.
#Day57 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jq0Tyzj4Yo
— Vijay Television (@vijaytelevision) November 30, 2020