பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி ஸ்டைலிலே ஷிவானி பேசி கொண்டிருக்கும் போதே நகர்ந்து சென்று பாலாஜியை கடுப்பாக்கி கோவப்படுத்தி உள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடியை காட்டி அந்த சீசனை ஓட்டுவது வழக்கம் . அந்த வகையில் இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானி இடையே லவ் டிராக்கை ஓட்டி வருகின்றனர்.ஆனால் அது உண்மையாக இல்லை என்று பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களுடன் விளையாடும் போட்டியாளர்களுக்கும் தெரியும் . இருப்பினும் ஷிவானி பாலாஜியுடனே அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டையும் நடக்கும் .ஆனால் அடுத்த நிமிடம் காணாமல் போய் விடும்.அதே போன்று பாலாஜி பேசி கொண்டே இருக்கும் போது அவ்விடத்திலிருந்து நகர்ந்து போய் விடுவார் . அவ்வாறு ஷிவானியிடமும் நடந்து கொள்ள அவரும் அதையே செய்து காட்டி பாலாஜியை வெறுப்பேற்றியுள்ளார் .பாலாஜியிடம் முகத்திற்கு நேராக பேசி கொண்டிருக்கும் ஷிவானியிடம் இருந்து நகர்ந்து செல்லும் பாலாஜியிடம் நான் பேசும் போது நகர்ந்து சென்றால் என்ன அர்த்தம் என்று கேட்க ,நான் என்ன பொம்மையா நடந்து போகாமல் இருக்க என்று பாலாஜி கேட்கிறார்.
அதன் பின் ஷிவானியும் அதே போன்று செய்து கடுப்பான பாலாஜியிடம் சென்று செய்து காட்டியதற்கே உங்களுக்கு கோவம் வருது , நீங்க ரொம்ப ரூடா இருக்கீங்க பாலா என்று கூறி அங்கிருந்து ஷிவானி நகர்ந்து செல்கிறார் .
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…