பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்து தான், ஷின்சோ அபேவை கொலைகாரன் சுட்டு கொன்றுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் உலகை அதிர வைத்த சம்பவம் என்றால் அது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டது தான்.
சம்பவ இடத்திலேயே அந்த கொலையாளியை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனிடம் விசாரிக்கும் போது, ஏதோ மதபோதகரை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் வந்திருந்ததாகவும், தவறுதலாக ஷின்சோ அபேவை சுட்டு கொன்றதவும் கூறியுள்ளான் அந்த கொலைகாரன்.
ஆனால், அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியபோது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியில் தெரிந்துள்ளது. இதற்காக பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்துள்ளான்.
அதே போல, அந்த கொலைகாரன் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் பயிற்சி செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுவற்றில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய துளைகள் இருந்துள்ளன. இதனையெல்லம் கொண்டு, இந்த கொலையை பல நாட்களாக திட்டம் தீட்டிதான் செய்துள்ளான் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாம்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…