நட்டி நடராஜுக்கு ஜோடியான ஷில்பா மஞ்சுநாத்.!
நட்டி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நட்டி நடராஜன் கடைசியாக கர்ணன் திரைப்படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது நடிப்பை பார்த்து அணைவரும் வியந்தனர். தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நட்டி சைக்கோ த்ரில்லர் கதையைகொண்ட படத்தில் நடித்துவருகிறார்.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தை வி.எம். முனிவேலன் வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் ஒளிப்பதிவாளராக கிறிஸ்டோபர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் நட்டிக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் வெளியான காளி மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.