இந்திய அணிக்கு பின்னைடைவு !தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல் !பண்ட் உள்ளே !

Default Image

காயம் காரணமாக உலகக்கோப்பை  தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான்ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தவான் அபாரமாக சதமடித்து சாதனை புரிந்தார்.இப்போட்டியில் ஆஸ்திரேலியாஅணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் வீசிய பந்தில் தவானுக்கு இடது கை பெரும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தவான் அதிரடியாக விளையாடி 117 ரன்கள் குவித்தார்.இந்நிலையில் அன்றைய போட்டியில் கூட தவானுக்கு பதில் ஜடேஜா களமிறங்கினர்.ஆனால்  தவானுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.இது தொடர்பாக பிசிசிஐ ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளது. அதில் ஷிகர் தவான் மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது உள்ளதாகவும், அவர் இங்கிலாந்தில் தொடர்ச்சியாக வைத்திருக்க அணியின் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாகவும், அவர் காயத்தின் தன்மை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும்  தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது  காயம் காரணமாக உலகக்கோப்பை  தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார்.இது தொடர்பாக இந்திய அணியின் மேனேஜர் சுனில் சுப்ரமணியன் கூறுகையில்,காயம் காரணமாக தவான் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக ரிசப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்