ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா – ஹரி காம்போவில் உருவாகும் அருவா எனும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் கதாநாயகி நடிகை ராசிக்கன்னா தானாம்.
தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு மற்றும் சிங்கம் ஆகிய படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் தான் ஹரி. இவர்கள் இருவரும் இணைந்து எடுக்க கூடிய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளனர். ஹரி இயக்கத்திலும், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும், சூர்யாவின் நடிப்பிலும் உருவாக்கவுள்ள புதிய திரைப்படம் தான் அருவா.
இந்த படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன் முறை. இந்நிலையில், படத்தில் சூர்யாவுக்கான ஜோடி நாயகி குறித்து கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை ராசிகன்னாவை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் எடுத்த முடிவின் பேரில், தற்பொழுது அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இது குறித்து நடிகை ராசிகன்னாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இன்னும் இரண்டு தெலுங்கு படங்கள் பேச்சு வார்த்தையில் உள்ளதாகவும், லாக் டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…