உழுத நிலத்தில் வயலில் இறங்கி பெண்களுடன் இணைந்து நாற்று நடுவதை நடிகை கீர்த்தி பாண்டியன் வெளிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் இந்த ஊரடங்கு விடுமுறையில் ஜாலியான மற்றும் த்ரோபேக் வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகளும், பிரபல நடிகையுமான கீர்த்தி பாண்டியன் வழக்கமாக கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவர் தன் தந்தையின் நிலத்தில் டிராக்டரை வைத்து உழுவது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது அந்த உழுத நிலத்தில் வயலில் இறங்கி பெண்களுடன் இணைந்து நாற்று நடுவதை போன்று வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் இந்த நிலம் எனது தந்தை அருண்பாண்டியனின் சொந்த நிலம் என்றும், இது பொது இடம் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…