வயலில் இறங்கி நாற்று நடும் பிரபல நடிகை.! யார் தெரியுமா?

Default Image

உழுத நிலத்தில் வயலில் இறங்கி பெண்களுடன் இணைந்து நாற்று நடுவதை நடிகை கீர்த்தி பாண்டியன் வெளிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால்  படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் இந்த ஊரடங்கு விடுமுறையில் ஜாலியான மற்றும் த்ரோபேக் வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின்  மகளும், பிரபல நடிகையுமான கீர்த்தி பாண்டியன் வழக்கமாக கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவர் தன் தந்தையின் நிலத்தில் டிராக்டரை வைத்து உழுவது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது அந்த உழுத நிலத்தில் வயலில் இறங்கி பெண்களுடன் இணைந்து நாற்று நடுவதை போன்று வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் இந்த நிலம் எனது தந்தை அருண்பாண்டியனின் சொந்த நிலம் என்றும், இது பொது இடம் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்