பூஜா ஹெகிடே தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தாவை அழகில்லை என்று கூறியதால் ரசிகர்கள் மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர் .
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் தாவி விட்டார். தற்போது இவர் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிபக்கம் றார். மேலும் பூஜா சல்மான்கானுடன் கபி ஈத் காபி என்ற இந்தி படத்தில் நடித்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தாவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “இவர் எனக்கு அழகாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து ஒரு சில நிமிடங்களில் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருந்தார். ஏற்கனவே இவரது சமூக வலைத்தள பக்கம் இரண்டு முறை ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சமந்தா ரசிகர்கள் எப்படி ஹேக் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் சரியாகும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அதனை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…