சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சாய்பல்லவியை அணுகியதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. கொரட்டால சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவும், அந்த கதாபாத்திரம் ஒரு நக்சலைட் என்றும், இந்த ரோல் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்றும், அந்த வேடத்தில் சாய்பல்லவியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ராணா படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடப்பதால் இதில் நடிக்க சாய்பல்லவி தயங்குவதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி படத்தில் நடிப்பாரா இல்லையா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…