அட்லீக்கு நோ! இரட்டை இயக்குனர்களுக்கு ஓகே! ஷாருக்கான் அதிரடி முடிவு?!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பெரிய வெற்றிகளை குவித்துள்ளார் இயக்குனர் அட்லீ. இவர் மீது பல கதை காப்பி என கூறப்பட்டாலும் படங்களை ரசிகர்கள் கொண்டாடும் படி எடுப்பதில் அட்லீ கில்லி. இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. இன்னும் அந்த அறிவிப்பு வெளியாக வில்லை.
அதற்குள் ஷாருக்கான் பாலிவுட் இரட்டை இயக்குனர்கள் ராஜ் & டிகே அவர்களிடம் கதை கேட்டுள்ளதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும் அதனால் அந்த கதையை அடுத்து ஷாருக் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.