ஷார்ஜாவில் உள்ள கப்பல் தீவிபத்திலிருந்து 13 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!
ஷார்ஜா காலி துறைமுகத்தில் இருந்த கப்பலில் இருந்து திடீரென தீப்பிடித்தது. இந்த கப்பலில் 6000 கேலன்கள் கொண்ட டீசல், 120 ஏற்றுமதி வாகனங்கள் 300 டயர்கள் ஆகியவை தீயில் எரிந்தன. அந்தநாட்டு நேரப்படி நேற்று காலை 6.30க்கு இந்த தீவிபத்து நடைபெற்றுள்ளது.
இந்த கப்பலில் இந்திய நாட்டை சேர்ந்த 13 பேர் சிக்கி இருந்தறனர். இந்த தீவிபத்து பற்றி தெரிந்தவுடன் தீயணைப்பு படை வீரர்கள் உடனே சென்று, அந்த தீ விபத்தை குறைத்து, 13 இந்தியர்களையும் காப்பாற்றினார்.
இந்த தீவிபத்து பற்றி தீயணைப்பு படை வீரர்கள் கூறுகையில், காலையில் 6.44 மணிக்கு தகவல் கிடைத்தது உடனே அங்கு சென்று ஒரு மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு அந்த தீயை அணைத்தனர். இதில் இருந்து 13 இந்தியர்களும் மீட்கப்பட்டு பிறகு, சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். என தெரிவித்தார்.
DINASUVADU