இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றபொது நடந்த விபத்தால் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படத்தின் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தேர்தல் வேலையில் இருப்பதால் இந்தியன் 2 படத்திற்கான எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை இதனால் இந்த படத்திற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் 50 வது படமாக உருவாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ இதுகுறித்து கூறுகையில், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ஷங்கர் மற்றும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் ஆகியோருடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…