தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சங்கர். தமிழ் சினிமாவுக்கு அட்லீ, வசந்தபாலன் ஆகிய பல வெற்றிப்பட இயக்குனர்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தான் இவரது உதவி இயக்குனர்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த மூவர் எதிர்பாராதவிதமாக அங்கு நடந்த விபத்தால் உயிர் இழந்தனர்.
இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், தனது தூக்கத்தை இழந்து தவிப்பதாகவும் சங்கர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த துயர சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அவரது உதவி இயக்குனர் ஆகிய அருண்பிரசாத் தற்பொழுது சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூரை சேர்ந்த அருண் பிரசாத் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே அருண்பிரசாத் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…