கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஷாங்காய் அரசு எடுத்த அதிரடி முடிவு..!
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலுமே குறைந்து கொண்டேதான் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள தலைவர்கள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீன நாட்டில் உள்ள ஷாங்காய் நகர அதிகாரிகள் குணாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர்.
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஒலிக்கும் மின்னணு கதவுகளை பொறுத்த உள்ளனர். இது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் விதமாக மணி சத்தத்தை எழுப்புமாம். அவர்கள் யாருக்கும் தெரியாமல் வெளியேற வேண்டுமென முயற்சித்தாலும் இந்த மணி ஒலித்து விடும் என கூறப்படுகிறது.