நாட்டுக்கே அவமானம்., இது நிச்சயம் வரலாற்றில் இருக்கும் – ஒபாமா கண்டனம்
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாமல் ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் போராடுவது எதிர்பார்த்த ஒன்றுதான். நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம். இது நிச்சியம் வரலாற்றில் இருக்கும் என முன்னாள் அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டு, தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளைமாளிகையில் தேர்தலில் வெற்றி பெட்ரா ஜோ பைடனுக்கு அதிகார மாற்றம் நடைபெற்றது. அப்போது, ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றிகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். பாதுகாப்பது படையினருக்கும், ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
Here’s my statement on today’s violence at the Capitol. pic.twitter.com/jLCKo2D1Ya
— Barack Obama (@BarackObama) January 7, 2021