நடிகை ஷாலினி 21 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி . குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் அமர்க்களம் படத்தின் மூலம் தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகி கணவர் , குழந்தைகள் என குடும்பத்துடன் செட்டிலான ஷாலினி தற்போது 21 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ஷாலினி மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற ஹிட் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பிரமாண்ட படத்தின் மூலம் மாஸ் கம்பேக் ஷாலினி கொடுப்பதாக வெளியான தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…