ஷகிப் , லிட்டன் தாஸ் அதிரடியில் 24 பவுண்டரி , 4 சிக்ஸர் பறந்தன !
நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பங்களாதேஷ் அணி விளையாடியது.இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 321 ரன்கள் சேர்த்தது.பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில் ஷகிப் அல் ஹசன் , லிட்டன் தாஸ் இருவரின் அதிரடி ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற வழிவகுத்தனர்.இவர்கள் கூட்டணியில் மட்டும் 22.3 ஓவரில் 189 ரன்கள் குவித்தனர்.மற்ற வீரர்கள் முதல் 19 ஓவரில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டை இழந்தனர்.
போட்டியில் ஷகிப் அல் ஹசன் , லிட்டன் தாஸ் இவர்கள் இருவரும் மட்டும் 28 பவுண்டரி ,4 சிக்ஸர் விளாசினார்.அதில் 16 பவுண்டரி ஷகிப் அல் ஹசன் , 8 பவுண்டரி லிட்டன் தாஸ் , 4 சிக்ஸர் எடுத்தார். ஷகிப் அல் ஹசன் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.