இந்தியாவை வீழ்த்தக்கூடிய திறமை பங்களாதேஷ்க்கு இருக்கு -ஷாகிப் அல் ஹசன் அதிரடி !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 24-ம் தேதி நடந்த லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் 51 ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல் 5 விக்கெட் பறித்து பங்களாதேஷ் அணி வெற்றி பெற வழி வகுத்தார். மேலும் அன்று நடந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகனாக தேர்வு செய்த பிறகு அவர் கூறுகையில் , உலக கோப்பை தொடரில் இந்திய சிறந்த அணியாக தற்போது உள்ளது. உலக கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் இந்திய அணியும் ஒன்றாக உள்ளது. இந்திய அணி வீழ்த்தியது கொஞ்சம் கடினமான செயல்தான் ஆனால் இந்திய அணி வீழ்த்தும் திறமை வங்கதேச அணிக்கு உள்ளது எனக் கூறினார்.
இந்திய அணியை வீழ்த்த சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம் என கூறினார். மேலும் வங்காளதேச சுழல் பந்து பயிற்சியாளர் சுனில் ஜோஷி கூறுகையில், வங்காளதேச அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளன இருந்தாலும் இந்திய அணி வீரர்கள் சுழற்பந்து சிறப்பாக விளையாடுவார்கள் என எங்களுக்கு தெரியும்.
மேலும் நாங்களும் ஆப்கானிஸ்தான்எதிரான போட்டியில் சுழற்பந்தை சிறப்பாக எதிர் கொண்டோம்.எங்களுடன் இந்திய அணி விளையாடும் போது அவர்களின் ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து உள்ளோம்.இதனால் எந்த இடத்தில் இந்திய அணிக்கு பந்து வீச வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என கூறினார்.